பவானி
கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழு உள்ளன. இவை 'கொங்கேழு தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
கொங்கேழு தலங்களில் மூன்றாவதாக அமையப் பெற்ற திருத்தலம் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்.
கொங்கேழு தலங்களில் மூன்றாவதாக அமையப் பெற்ற திருத்தலம் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்.
நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி ஆகிய நான்கு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பழமையான பெரிய கோயில் கொண்ட நகரமே பவானி.
பிறப்பு முதல் இறப்பு வரையிலான சகல தோஷங்களுக்கும் வருடத்தில் எல்லா நாட்களும் பக்தர்கள் பரிகாரம் காணும் பெருமை கொண்டது பவானியில் இருக்கும் திருக்கோயில்.
வாருங்கள், நாமும் வலம் வருவோம்.
இம்மையும் மறுமையும் நலம் பெறுவோம்.
தலபுராணம்
அழகாபுரி என்னும் சிவ நகரை ஆண்டு வந்த செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவ தலங்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் கொண்டவன்.
ஒருமுறை தன் புட்பக விமானத்தில் செல்லும்போது காவிரி, பவானி நதிக்கரையில் பசுமை நிறைந்த சோலைகளைக் கண்டான். அவற்றின் நடுவே தெய்வீகமான ஒரு மரத்தையும் கண்ணுற்று வியந்தான்.
அச்சோலைகளில் மானும் புலியும், பசுவும் யானையும் சிங்கமும், எலியும் நாகமும் பகையின்றி ஒருங்கே ஆற்றில் மகிழ்ச்சியோடு நீர் அருந்திக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தன.
அருகிலே தவ ஆற்றல் நிறைந்த முனிவர்களும் யோகிகளும் குழுமியிருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்து வணங்கி நின்றான்.
காண்பது எல்லாம் அதிசயமாய் அவனுக்குப் பட்டது. அப்போது ஓர் அசரீரி எழுந்தது. அது தெய்வத்தின் குரல்.
"குபேரா...இந்த இடத்தில் வேதமே வடிவாகிய இலந்தை மரம் ஒன்று இருக்கிறது.
மரத்தடியில் ஜோதி மயமான ஒரு லிங்கம் இருக்கிறது.
இந்தப் புண்ணிய தலத்தில் நீ செய்யும் தவமும் பூஜையும் பல மடங்கு பலனைத் தரும்."
சிரம் மேல் கை குவித்த வண்ணம் இலந்தை மரம் அருகே வந்த குபேரன் தவம் மேற்கொண்டு லிங்க வழிபாடு செய்தான்.
அதன் பலனாக இறைவனே குபேரன் முன் தோன்றி "வேண்டும் வரம் கேள்" என்றார்.
"பெருமானே! தாங்கள் எனக்கு அளித்திருக்கும் அழகாபுரியைப் போல் இருக்கும் இத்தலத்திற்கும் அப்பெயரை நினைவூட்டக்கூடிய பெயர் நிலைக்க வேண்டும்" என்று வேண்டி நின்றான்.
குபேரனின் தூய வேண்டுதலை இறைவன் மறுப்பாரா என்ன?
அது முதல் இத்தலம் 'தட்சிண அளகை' என்னும் இறைவன் சூட்டிய பெயருடன் விளங்குகிறது. இறைவனுக்கு 'அளகேசன்' என்ற பெயரும் நிலைத்துப் போனது.
இறைவாக்குப்படி இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுப் பூஜை செய்தால் எண்ணற்ற பலாபலன்கள் கிடைத்து வருகின்றன.
இத்தலத்தில் வழிபடுவோருக்கு காசி, இராமேஸ்வரம் சென்று வழிபட்டதன் பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.
பாடல் பெற்ற தலம்
சைவம் போற்றும் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சங்கமேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சீடர்களுடன் வருகை புரிந்தார்.
அவருடன் வந்த சீடர்களில் ஒரு சிலருக்கு சுர நோய் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டனர்.
அவர்கள் கோயிலினுள் கொலு வீற்றிருக்கும் ஜூரஹரேஸ்வரரை
ஆழ்ந்து வழிபட்டு உடனடியாக நோய் நீங்கப் பெற்றனர்.
அதுபோது திருஞானசம்பந்தர்
சங்கமேஸ்வரரைப் போற்றி தேவாரப் பாடல்கள் பாடினார். அதனால் சங்கமேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலமாகப் போற்றி வணங்கப்படுகிறது.
தலச் சிறப்பு
பவானி ஆறும் காவிரி நதியும் கண்ணுக்குப் புலப்படாத மாய நிலையில் உள்ள அமுத ஆறும்
கூடும் இடத்தில் (கூடுதுறை, சங்கமிக்கும் இடம்) பவானி சங்கமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

பவானி, பவானி கூடல், பவானி முக்கூடல், பத்மபுரி, வதரிகாசிரமம், தட்சிண அளகை, விஜயாபுரி, வீரபுரி தென் திருவேணி சங்கமம் முதலான பெயர்களில் இத்திருத்தலம் அழைக்கப்பட்டு வருகிறது.
குபேரன், விசுவாமித்திரர், பராசர முனிவர், அருணகிரியார் வழிபட்ட திருத்தலம் இது.
இதிகாச காலத்தில் ராவணன் சங்கமேஸ்வரரை வழிபட்டதாக ஒரு குறிப்பு உள்ளது.
ஆண்டுதோறும் மாசி மகம் ரத சப்தமிக்கு மூன்றாவது நாள் சூரிய ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் மீது படுவது அரிய கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சூரியனே வழிபடும் சூரிய பூஜை சிறப்புத் தானே!
இத்தலத்தின் மண்ணுக்குள் லட்சக்கணக்கான சிவலிங்கங்கள் இருப்பதாக தொன் நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே
இவ்வூரில் எரிக்கப்படும் சடலங்களில் மண்டை ஓடுகள் சிதறுவதில்லை என்கிறார்கள்.
சங்கமேஸ்வரர் கோயிலையும் அவினாசியப்பர் கோயிலையும்
இணைக்கும் குகை வழிப் பாதை இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
சேர சோழ பாண்டிய மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட ஆலயம் இது.
கோயில் அமைப்பு
4 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள கோயிலுக்கு 2 வாயில்கள் உள்ளன.
முதன்மைக் கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும், 7 கலசங்களையும் கொண்டு அருட்காட்சி தருகிறது.
கோயிலே சிவவடிவம் என்பதால்
கோயிலின் நுழைவாசலுக்கு முன்பு நந்தீஸ்வரர் இறையம்சத்தோடு அருள் பாலிக்கிறார்.
கோயில் நுழைவாயிலில் கோட்டை விநாயகர், உட்புறத்தில் ராஜகணபதி சன்னதி ஒரு புறத்திலும் முத்துக்குமாரசுவாமி சன்னதி மறுபுறத்திலும் உள்ளன.
கோயிலினுள் நுழைந்தால் ஓர் அழகுமிகு மண்டபம். இங்கு
ஆதிகேசவப் பெருமாள் சன்னதி, சௌந்தரநாயகித் தாயார் சன்னதி, ஸ்ரீ வேணுகோபால சுவாமி சன்னதி உள்ளன.
இரு சன்னதிகளுக்கு இடையில் லட்சுமி நரசிம்மர் கருணையோடு காட்சியளிக்கிறார்.
சிவன் ஆலயத்தில் பெருமாள் கோயிலும் உள்ளதால் இக்கோயில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான கோயிலாகப் போற்றப்படுகிறது.
மூலவராக சங்கமேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள் மழை பொழிகிறார். இறைவி வேதாம்பிகை
இறை சக்தியாக அருள் புரிகிறாள்.
உள்பிரகாரத்தில் அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ள சுப்பிரமணியர் சன்னதி, அறுபத்து மூவர் சன்னதி, பஞ்சபூத லிங்கங்கள், கொங்கு மண்டலத்திற்கே உரித்தான தனி சனி பகவான் சன்னதி முதலியன உள்ளன. கோஷ்ட மூர்த்தியாக தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை காட்சியளிக்கிறார்கள்.
முருகனுக்கு சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிக்கு நடுவில் சன்னதி அமைந்திருப்பதை சோமாஸ்கந்த அமைப்பு என்பார்கள். இங்கு இவ்விதம் அமைந்திருப்பது சிறப்பம்சம்.
ஜுரஹரேஸ்வரர் திருவுருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் கையில் அக்னி ஏந்தி கோயிலினுள் உறைந்துள்ளது அரிய சிறப்பம்சம்.
ஆதிகேசவப்பெருமாள் சன்னதிக்குப் பின்புறம் பசுவின் சிலை உள்ளது. பசுவின் முன்புறம் ஒரு தலை, பின்புறம் ஒரு தலை என்று இரண்டு தலைகளுடன் அப்பசு காட்சியளிக்கிறது.
இக்கோயிலின் கோபுரம் அழகிய வேலைப்பாடுகள் கொண்டதாய் இருக்கிறது. குறிப்பாக அம்பாள் சன்னதியின் சிற்ப வேலைப்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கும்.
வெளிப்பிரகாரத்தில் நதிக்கரையில்
சகஸ்ர லிங்கேஸ்வரர் சன்னதி, காயத்ரி லிங்கேஸ்வரர் சன்னதி, அமிர்த லிங்கேஸ்வரர் சன்னதி முதலியன அழகிய பூங்காவின் நடுவில் அமைந்து உள்ளன.
விசுவாமித்திரர் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்ததால் இறைவனுக்கு 'காயத்ரி லிங்கேஸ்வரர்' என்ற பெயர் வந்தது.
திருநாமங்கள்
இக்கோயிலில் சங்கமித்திருக்கும் இறைவன் சங்கமேஸ்வரருக்கு
சங்கமுக நாதேஸ்வரர், சங்கம நாதர், அளகேசன், மருத்துவ லிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரர், நட்டாற்றீஸ்வரர், திருநண்ணாவுடையார் ஆகிய இறைநாமங்கள் இருக்கின்றன.
இறைவி வேதாம்பிகைக்கு வேதநாயகி, பவானி , சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி ஆகிய திருநாமங்கள்
உள்ளன.
பவானி என்றால் உயிரைக் கொடுப்பவர் என்று பொருள். இயற்கையான சக்தியாய், படைப்பு ஆற்றலின் ஆதாரமாய் அருள் வழங்கும் தாயே பவானி.
தீர்த்தங்கள்
காவிரி, பவானி, அமிர்த நதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்
முதலான தீர்த்தங்கள் நிறைந்த புண்ணிய திருத்தலம்.
தலவிருட்சம்
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் வேதமே வடிவாக அமைந்த இலந்தை மரம். மரத்தடியில் சுயம்பு லிங்கம் உள்ளது.

குபேரன் தரிசித்த இந்த இலந்தை மரம் வருடம் முழுவதும் சுவைமிக்க பழங்களைத் தருகிறது. தினமும் நைவேத்தியத்திற்கு இதன்
பழங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
குழந்தை இல்லாதவர்கள் இங்கு இருக்கும் இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும் என்கின்ற பலத்த நம்பிக்கை உள்ளது.
திருநணா
பவானிக்குப் பழமையான பெயர் திருநணா. 'நண்ணாத' என்றால் 'புரியாத' என்று பொருள். யாதொரு தீங்கும் புரியாத ஊர் என்ற அர்த்தத்தில் திருநணா என்ற பெயர் விளங்குகிறது.
வரலாறு வணங்கும் வேதநாயகி
சைவமும் வைணவமும் போற்றும் சங்கமேஸ்வரர் ஆலயம் கிருத்துவத்தைப் போற்றிய ஓர் ஆங்கிலேயரையும் பக்தராக்கியது ஒரு வரலாற்று நிகழ்வு.
ஆம்.... எம்மதமும் சம்மதம் என மானுடருக்கு அருள்தரும் அம்பிகையே வேதநாயகி.
வில்லியம் காரோ (W. Karo) என்ற ஒர் ஆங்கிலேயர் 1804 ஆம் ஆண்டில்
கோவை மாவட்ட கலெக்டராக இருந்தார்.
ஒருமுறை அவர் பணி நிமித்தமாக பவானி வருகை புரிந்து ஆய்வு மாளிகையில் தங்கினார்.
இரவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
தனித்திருந்த அவருக்கு ஒரு குழந்தை அருகில் வந்து கையைப் பிடித்து இழுப்பது போல் தோன்றியது. குழந்தையின் கையில் அகப்பட்ட காரோ அவரையும் அறியாமல் சென்றார்.
அக்குழந்தை அவரை ஆய்வு மாளிகையை விட்டு சற்று தள்ளி அழைத்துச் சென்றது. அப்போது தொடர் இடியும், பேரொளியும் பயமுறுத்த திரும்பி மாளிகையைப் பார்த்தார்.
அதுகணம் அவர் கண்ணெதிரேயே ஆய்வு மாளிகை இடிந்து விழுந்து நொறுங்கியது.
அதைக்கண்டு அச்சத்தில் திரும்பிய ஆட்சியர் தன்னை அழைத்து வந்த குழந்தையைப் பார்த்தார்.
அதுவரை கைப்பிடித்து இருந்த குழந்தையைக் காணவில்லை.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவும் இல்லை.
மறுநாள் இது குறித்து தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் அவர் கூறிய போது 'குழந்தை வடிவில் வந்து அவரைக் காப்பாற்றியது அன்னை வேதாம்பிகை தான்' என்று அவ்வூர் பெரியவர்கள் அடித்துச் சொன்னார்கள்.
வில்லியம் காரோ உள்ளத்தில் எழுந்த பேரொளி அக்கணமே அவரை அம்பிகையின் பக்தர் ஆக்கியது.
தன் உயிரைக் காப்பாற்றிய தாயைப் போற்றிய அவர் ஒரு 'தந்தக் கட்டிலை' அம்பாளுக்கு நன்றிப் பெருக்கோடு காணிக்கையாக்கினார். அக்கட்டிலில் தனது கையொப்பத்தையும் இட்டு அம்மனின் பெருமையை உலகறியச் செய்தார்.
மாற்று மதத்தினர் கோயிலுக்குள் சென்று வழிபட முடியாது என்ற காரணத்தால் அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரே இருந்த மதில் சுவரில் மூன்று துளைகள் இட்டு அத்துளைகள் வழியே அன்னையைத் தரிசித்து மகிழ்ந்தார்.
அதன் பின்னர் பவானி
வரும் போதெல்லாம் அம்மனைத் தரிசிப்பது அவரது வழக்கமாய் மாறிப்போனது.சங்கமேஸ்வரியின் கீர்த்தியைப் பறைசாற்றும் இந்நிகழ்வு
1804 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் நடந்தது என்பது வரலாறு.
இன்றும் கோயில் மதில் சுவரில் காரோ ஏற்பாடு செய்திருக்கும் சாளரம் வழியே அம்மனை நாமும் தரிசிக்கலாம்.
பரிகாரங்கள்
தமிழகத்தில் உள்ள பரிகாரத் தலங்களில் முக்கியமானது பவானி.
மனிதப் பிறவிக்குரிய எல்லாவிதமான பரிகாரங்களும் வருடம் முழுவதும் எல்லா நாட்களும் நடந்து கொண்டிருக்கும் தலம் இது.
முன்னோர்களுக்கான சடங்குகள் செய்ய உகந்த தலம் இது.
அகால மரணம் அடைந்தவர்களுக்காக இங்கு செய்யப்படும் 'நாராயண பலி பூஜை' அவர்களின் ஆத்மா சாந்தி அடைய உதவும் என்பது ஐதீகம்.
அமிர்தலிங்கேஸ்வரர் சன்னதியில் குழந்தைப் பேறுக்குக் கோவிலிலுள்ள அமிர்தலிங்க வழிபாடு வழி வகுக்கும். லிங்கத்தின் பாணப்பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்கிறார்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த வாய்ப்பு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
அடிக்கடி காய்ச்சல், தோல் வியாதி, மன நோய் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு இருக்கும் ஜுரஹரேஸ்வரருக்கு குளிர்ந்த திரவியங்களால் அபிஷேகம் செய்து மிளகு சாதம், மிளகு ரசம், அரைக்கீரைக் கூட்டு வைத்து நைவேத்தியம் செய்து வழிபட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் ஜுரஹரேஸ்வரரை மிளகு சீரகத்தை படைத்து வில்வத்தால் அர்ச்சனை செய்து அதை உணவில் சேர்த்துக் கொண்டால் நற்பலன் கிடைக்கும்.
தனி சன்னதியாக இருக்கும் சனீஸ்வரன் சன்னிதியில் சனீஸ்வர பகவான் மாந்தி கிரகத்தின் ரூபத்தில் இருக்கிறார். இங்கு மாந்தி தோஷம், குளிகை தோஷம் போன்ற தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
நாக தோஷம் உள்ளவர்கள் கல்லில் நாகரைப் பிரத்தியேகமாகச் செய்து ஆற்றங்கரை விநாயகர் அருகே உள்ள அஸ்வத்த மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.
திருவிழாக்கள்
பவானி கூடுதுறையிலும், சங்கமேஸ்வரர் ஆலயத்திலும் வருடம் முழுவதும் எல்லா நாட்களும்
திருவிழாக் கோலம் தான். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலுக்காகவும், நீராடுதலுக்காகவும், பரிகாரத்திற்காகவும், சங்கமிக்கிறார்கள்.
ஆடிப்பெருக்கு, சித்ரா பௌர்ணமி ஆகியன முக்கிய திருவிழாக்கள்.
ஆடிப்பெருக்கில் நீராடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். சித்திரை மாதம் 13 நாட்கள் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள்.
நந்தி தேவாரம்
தேவாரப் பாடல் பெற்ற பவானி திருத்தலம் குறித்து ஸ்ரீ நந்தீஸ்வரர் அருளிய நந்தி தேவாரம் நந்தி ஜீவநாடி வாயிலாக கரூர், ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம், சுவாமி சித்தகுருஜி அவர்கள் வழங்கியுள்ளார்.
வெண்நுரை நதிமூன்று மகிழ்ந்தாடும் பவானியிலே
நன்கரை கொள் அமிர்தகுடம் கவிழ லிங்கமதாய்
விண்போற்ற சங்கமித்த வேதாம்பிகை பாகன்
கண்கண்டு கை தொழவே கரைசேர்வர் பிணியறவே.
கோயில் அமைவிடம்
ஈரோடு மாவட்டத்தில் பவானி அமைந்துள்ளது. கோவையில் இருந்து 100 கி.மீ, சேலத்தில் இருந்து 56 கி.மீ, ஈரோட்டில் இருந்து 15 கி.மீ
பயண தூரத்தில் உள்ளது.
கூகுள் மேப் வழிகாட்டி
https://maps.app.goo.gl/zXEaiQMFchBww6uv9
அருகிலிருக்கும் விமான நிலையம் மற்றும் இரயில் நிலையம்
கோவை விமான நிலையம்
ஈரோடு இரயில் நிலையம்
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஓம் நமசிவாய🙏

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
Comments
Post a Comment