பவானி

மாரிமைந்தன் சிவராமன் ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 பாடல் பெற்ற தலங்கள்-3 பவானி கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழு உள்ளன. இவை ' கொங்கேழு தலங்கள் ' என்று அழைக்கப்படுகின்றன. கொங்கேழு தலங்களில் மூன்றாவதாக அமையப் பெற்ற திருத்தலம் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் . நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி ஆகிய நான்கு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பழமையான பெரிய கோயில் கொண்ட நகரமே பவானி. பிறப்பு முதல் இறப்பு வரையிலான சகல தோஷங்களுக்கும் வருடத்தில் எல்லா நாட்களும் பக்தர்கள் பரிகாரம் காணும் பெருமை கொண்டது பவானியில் இருக்கும் திருக்கோயில். வாருங்கள், நாமும் வலம் வருவோம். இம்மையும் மறுமையும் நலம் பெறுவோம். தலபுராணம் அழகாபுரி என்னும் சிவ நகரை ஆண்டு வந்த செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவ தலங்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் கொண்டவன். ஒருமுறை தன் புட்பக விமானத்தில் செல்லும்போது காவிரி, பவானி நதிக்கரையில் பசுமை நிறைந்த சோலைகளைக் கண்டான். அவற்றின் நடுவே தெய்வீகமான ஒரு மரத்தையும் கண்ணுற்று வியந்தான். அச்சோலைகளில் மானும் புலியும், பசுவும் யான...