கொடுமுடி

மாரிமைந்தன் சிவராமன் ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 பாடல் பெற்ற தலங்கள்-5 கொடுமுடி தற்போது கொடுமுடி என்று அழைக்கப்படும் திருப்பாண்டிக் கொடுமுடி பாடல் பெற்ற தலங்களில் முக்கியமானது. கொங்கு ஏழு சிவதலங்களில் புகழ் பெற்ற ஒன்று. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தெய்வங்களும் ஒரே கோயிலில் குடி கொண்டிருக்கிற தலம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்ற மூன்று முத்தான நாயன்மார்களால் பாமாலைகள் சூட்டப்பட்ட திருத்தலம். மூன்று கோபுரங்கள், மூன்று வாயில்கள், மும்மூர்த்திகள், மூன்று கோயில்கள், மூவர் பாடிய தலம் என்பதால் இங்கு பிரார்த்தனை செய்பவர்கள் மும்மடங்கு பலன் பெறுவார்கள் என்பது நிச்சயம். கொங்கு நாட்டில் உள்ள பரிகாரத் தலங்களில் முக்கியமானது கொடுமுடி. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 213 - ஆவது சிவதலமாக விளங்கும் கொடுமுடிக்குச் சென்று வருவோம். வாருங்கள். திருப்பாண்டிக் கொடுமுடி இத்தலம் கொடுமுடி, திருப்பாண்டிக் கொடுமுடி, பிரம்மபுரி, ஹரிஹரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், கறையூர், கரைசை, அங்கவர்த்தனபுரம், பாண்டு நகரம், பரத்துவாச சேத்திரம், தென் கைலாசம் முதலான பெயர்க...