Posts

Showing posts from December, 2025

திருச்செங்கோடு

Image
ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 பாடல் பெற்ற தலங்கள்-7 திருச்செங்கோடு கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் முக்கியமானது திருக்கொடி மாடச் செங்குன்றூர் என்று புராண காலத்தில் அழைக்கப்பட்ட இப்போதைய திருச்செங்கோடு ஆகும். இது  தெய்வாம்சமாகக் காட்சியளிக்கும் ஒரு மலைக்கோயில். கோயிலின் பெயரே ஊரின் பெயராகவும் அமைந்துவிட்டது இறைவனின் திருவுளமே. இது இறைவனும் இறைவியும் கலந்த அர்த்தநாரீஸ்வரர் தலம்.  சிவன் கோயில் என்றாலும் செங்கோட்டு வேலவர் குடிகொண்டிருக்கும் திருமுருகன் திருத்தலம். அர்த்தநாரீஸ்வரர்  சிவனும் பார்வதியும் இணைந்த ஓர் உருவமாய் நின்ற கோலத்திலும், முருகப்பெருமான் செங்கோட்டு வேலவராய் வள்ளி தேவசேனையுடன் நின்ற கோலத்திலும், மகாவிஷ்ணு ஆதி கேசவப் பெருமாளாக ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்திலும் ஒரு சேர அருள் மழை பொழியும் திருத்தலம். பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 208 ஆவதாக இடம் பெற்றிருக்கும் திருச்செங்கோடு செல்வது பக்த கோடிகள் பலருக்கும் கிடைக்காத ஒரு கொடுப்பினை. வாருங்கள்! திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலையும் திருச்செங்கோடு மலையையும் வலம் வந்து அரு...