வெஞ்சமாக்கூடல்

மாரிமைந்தன் சிவராமன் ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 பாடல் பெற்ற தலங்கள்-4 வெஞ்சமாக்கூடல் தேவாரப் பாடல் பெற்ற 'கொங்கு ஏழு' சிவ தலங்களில் ஒன்று ' வெஞ்சமாக்கூடல் ' எனும் ' வெஞ்சமாங்கூடலூர் '. தேவர்களின் தலைவன் இந்திரனும், சமயக்குரவர் நால்வரில் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தரும், பெரிய புராணம் அருளிய தெய்வச் சேக்கிழாரும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரும், இராமலிங்க அடிகளும், திருப்பதி சுவாமிகளும், திருமுருக கிருபானந்த வாரியாரும் வழிபட்ட திருத்தலம் வெஞ்சமாங்கூடலூர். இறையருளும் ஆன்மிக எழில் அமைப்பும் நிரம்பப் பெற்றிருக்கிற வெஞ்சமாங்கூடலூர் திருத்தலத்திற்கு வாழ்க்கையில் ஒருமுறையேனும் சென்று வழிபடுதல் மானிடப் பிறவியின் இறைக் கடமைகளில் தலையானது. வாருங்கள், இறைவன் கல்யாண விகிர்தீஸ்வரரையும், இறைவி பண்ணேர் மொழியம்மையையும் வணங்கிப் பிறவிப் பயனடைவோம். கொங்கு நாடு கொங்கு என்பதற்குத் தேன் என்று பொருள். தேன் கிடைத்த நாடு என்பதால் கொங்கு நாடு எனப் பெயர் கொண்டது. தமிழர்களின் தங்க காலமான சங்க காலத்திலேயே கொங்கு நாடு தனி நாடாகச் சிறப்புப் பெற்றிருந்தது. அக்காலக் ...