கரூர் ஆனிலையப்பர்
மாரிமைந்தன் சிவராமன் ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 👈 பாடல் பெற்ற தலங்கள்-6 கரூர் ஆனிலையப்பர் 'ஆதிகருவூர் அதிவெஞ்சமா கூடல் நீதன் கொடுமுடி மேல்நீர் நணா - மேதினியில் நாதன் அவிநாசிநன் முருகன் பூண்டி திருச்சோதி செங்கோடெனவே சொல்' என்பது கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல். கொங்கு ஏழு சிவ தலங்களில் முதன்மையான கரூர் அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனிருக்கும் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலைத் தரிசித்து அருள் பெறுவோம் வாருங்கள். கருவூர் சிறப்பு கரூர் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் கருவூரின் சிறப்...