அவிநாசி

மாரிமைந்தன் சிவராமன் பாடல் பெற்ற தலங்கள்-1 அவிநாசி திருப்புக்கொளியூர் சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானின் தொண்டர் மட்டுமல்ல, நாயனாரும் கூட. இறையனார் சிவபிரானின் பிரியமான தோழர் எனும் பாக்கியம் பெற்றவர். சிவாலயங்கள் தோறும் சென்று அங்கு வீற்றிருக்கும் அம்மையப்பனை வணங்கி அழகுத் தமிழில் அமுதப் பாடல்கள் பாடுவது அவரது சிவத்தொண்டு. ஒருமுறை சுந்தரர் கொங்கு நாட்டில் பயணம் செய்தார். அதுபோது 'திருப்புக்கொளியூர்' என்ற ஊரில் உள்ள சிவாலயம் செல்ல விழைந்தார். கோயிலுக்கு அந்தணர்கள் வாழும் அக்ரகாரம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு வீடு அமர்க்களமாக இருந்தது. இன்னிசை முழங்க வீடு களை கட்டியிருந்தது. வீட்டிற்கு வெளியே ஆட்டமும் பாட்டமும் அதிகம் இருந்தது. அதேசமயம் எதிர் வீடு சோகமயமாய்க் காணப்பட்டது. அடிக்கடி விசும்பலும் கதறலும் வெளியே வீதியில் சென்று கொண்டிருந்த சுந்தரருக்குக் கேட்டது. இந்த வித்தியாசச் சூழல் சுந்தரருக்கு புதிது. எனவே விசாரித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அத்தெருச் சிறுவர்கள் ஏரிப் பக்கம் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது திடீரெனக் கரைக்கு வந்த...